உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்

பல்லடம்: அல்லாளபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கூடாரவல்லி உற்சவத்தில், பக்தர்கள் பங்கேற்று பக்தி பரவசம் அடைந்தனர்.

ஆண்டுதோறும் மார்கழி மாதம், வைணவ ஸ்தலங்களில் வைகுண்ட ஏகாதசியும், இதையடுத்து, மார்கழி 27ம் நாள், கூடாரவல்லி உற்சவமும் நடந்து வருகிறது. இந்நாளில் ஆண்டாளை தரிசித்தால், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்பது ஐதீகம். பல்லடம் அருகே, அல்லாளபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில், கூடாரவல்லி உற்சவ விழா நேற்று முன்தினம் நடந்தது. கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா எனும் பாசுரம் பாடப்பட்டது. தொடர்ந்து, ஆண்டாள் நாச்சியார் உற்சவமூர்த்திகளுக்கு கலச திருமஞ்சனம், மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி மூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !