உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கூடாரவல்லியை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று மாலை உளுந்துார் பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து சீர்வரிசை பொருட்கள் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அதனைத் தொடர்ந்து பெருமாள் ஆண்டாள் உற்சவர்களுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு கோவில் உள்பிரகாரத்தில் வலம் நடந்தது. ஆண்டாள் பத்தர்கள் திருப்பாவை, திருவெண்பா பாடினர். சிறப்பு பூஜைகளுக்குப்பின் நேற்று முன்தினம் இரவு 8:40 மணியளவில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !