உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம்

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்சம் உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள்
கோவிலில் மார்கழி மாத சிறப்பு பூஜை நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நம்மாழ்வாருக்கு பெருமாள்மோட்சம் அளிக்கும் ஐதீகம் நடத்தப்பட்டது. இதனையொட்டி பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து ஆழ்வார்களும் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது. நம்மாழ்வாருக்கு பெருமாள் மோட்சம் அளித்த சிறப்பினை பக்தர்களுக்கு தேசிக பட்டர் எடுத்துரைத்தார். சாற்று முறை சேவை பூஜைகளுக்கு பின், மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !