புல் மேட்டில் இருந்து மகரஜோதி ஐயப்ப பக்தர்கள் தரிசனம்
ADDED :1015 days ago
கூடலுார்: புல்மேட்டில் இருந்து சபரிமலை மகரஜோதி தரிசனத்தை 5528 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை ஐயப்பன் கோவிலில் இருந்து மட்டுமல்லாது புல்மேடு, பருந்தும்பாறை, பாஞ்சாலி மேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். 2011ல் மகரஜோதி தரிசனத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 104 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள். அதன் பின்பு மகரஜோதி விழா காலங்களில் பக்தர்கள் புல்மேட்டில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு பலத்த பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டனர். நேற்று புல்மேட்டில் 5528 பக்தர்கள் தரிசனம் செய்து பாதுகாப்புடன் திரும்பினர். இடுக்கி கலெக்டர் ஷீபாஜார்ஜ் மகரஜோதி தரிசனம் முடியும் வரை புல் மேட்டில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டார்.