உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விட்டல் ருக்மிணி சமஸ்தானத்தில் கோ பூஜை

விட்டல் ருக்மிணி சமஸ்தானத்தில் கோ பூஜை

தஞ்சாவூர், ஆடுதுறை  அருகே கோவிந்தபுரத்தில் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் பாண்டுரங்கன் கோவில் உள்ளது. தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் இங்கு அமைந்துள்ள கோசாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெய்வீக நாட்டு இன பசுக்கள் சேவை நோக்கத்துடன் வளர்க்கப்படுகிறது.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோவில் ஸ்தாபகர் பிரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜ் ஏற்பாட்டின் படி, ஆயிரம் பசுக்களுக்கும் கோ பூஜை வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பசுக்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு,  ஆரத்தி காண்பித்து பசுவை போற்றி மந்திரங்களை கூறி பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில்  மும்பை ராமகிருஷ்ண மடம் மூத்த துறவி  சுவாமி அபரோஷானந்தா, சேலம் சுவாமி சத்யேஸ்வரானந்தா, திருவண்ணாமலை சுவாமி மாத்ருசேவானந்தா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு கோ பூஜை செய்து பசுக்களை வலம் வந்து மகா தீபாரதனை செய்து வழிபட்டனர். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை பஞ்சாபிகேசன், கணபதி, ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !