உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாடு

சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் மாட்டுப் பொங்கல் சிறப்பு வழிபாடு

மதுரை :  மதுரை மாவட்டம், மேலூர், சிவாலயபுரம், தும்பைப்பட்டி, கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோயிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்தி எம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது.

காலை 9.00  மணிக்கு நந்தி எம் பெருமானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம்,  தீப ஆராதனை நடைபெற்றது. நந்தி எம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பக்தகோடிகள் பலர் கலந்து கொண்டு அருள்மிகு நந்தி எம் பெருமானையும், சுவாமிகளையும் வழிபட்டு அருள் ஆசி பெற்றுச் சென்றனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், செங்கரும்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், திருக்கோயில் அர்ச்சகர் சிவ ஸ்ரீ ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !