ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அமைச்சர் சாமிநாதன் வழிபாடு
ADDED :16 minutes ago
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்தார்.
திருப்பூர் அருகேயுள்ள அலகுமலையில் உள்ள முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நிகழ்ச்சி நேற்று நான்காவது நாளாக நடந்தது. இதையொட்டி, ஸ்ரீ ஸ்கந்த சப்தசதீ மகா யாக பூஜை நடை பெற்றது. இதில் அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்டு வழிபட்டார்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கார்யசித்தி ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வேண்டுதல் நிறைவேற வழிபாடு செய்தார். முன்னதாக, அமைச்சர் சாமி நாதனை, கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.