வல்லக்கோட்டை முருகன் கோவிலில் நாளை கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
ADDED :10 minutes ago
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.
ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி பெருவிழா, கடந்த 22ம் தேதி வெகு விமரிசையாக துவங்கியது.
தினசரி வெவ்வேறு அலங்காரத்தில் உற்சவர் முருக பெருமான் எழுந்தருளினார். நேற்று, 4ம் நாளில் உற்சவர் முருகன், வாடாமல்லி மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இன்று, மஞ்சள் சாத்தி அலங்காரம் நடக்க உள்ளது. அதை தொடர்ந்து மாலை, 4:00 மணி அளவில் உற்சவர் முருகன், வல்லம் சடையீஸ்வரர் கோவிலில் சக்திவேல் பெறும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
நாளை, எலுமிச்சை மாலையில் அலங்காரமும், மாலை, 5:30 மணிக்கு சூரசம்ஹாரமும், நாளைய மறுநாள் திருக்கல்யாண உத்சவமும் நடக்க உள்ளது.