ராமேஸ்வரம் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :994 days ago
ராமேஸ்வரம் : பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து புனித நீராடினர். பின் சுவாமி, அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர் கூட்டம் அலைமோதியதால் கோயில் முதல் பிரகாரத்தில் நெரிசலில் சிக்கி அவர்கள் அவதியுற்றனர். கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.