வரசித்தி விநாயகர் கோயிலில் காணிக்கை கணக்கிடும் பணி
ADDED :1247 days ago
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயிலில் கடந்த 15 நாட்களில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை (பணத்தை) கணக்கிடும் பணி இன்று காலை முதல் மாலை வரை கோயில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் முன்னிலையில் கணக்கிடப்பட்டது .இதில் கடந்த 15 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணமாக ஒரு கோடியை 5 லட்சத்து 91 ஆயிரத்து 508 ரூபாய் மற்றும் தங்கம் : 25 கிராம் வெள்ளி : 400 கிராம்களுடன் வெளிநாட்டு பணமும் வந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.