உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்

நான்குநேரி: நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று தெப்பஉற்சவம் நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் தைஅமாவாசையை முன்னிட்டு வானமாமலை பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய்காப்பு உற்சவம் நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை தெப்பஉற்சவம் வானமாமலை மடத்தின் 31 வது மடாதிபதி மதுரகவி வானமாமலை ராமானுஜஜீயர் ஆசியுடன் நடந்தது. இதில் காலையில் வானமாமலை பெருமாள் ஸ்ரீவரமங்கைத்தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை சுமார் 6.30 மணிக்கு வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத்தாயார் எழுந்தருளி கிருஷ்ணன் கோயிலை வந்தடைந்தனர். அங்கு தெப்பகுளத்தில் தெப்பத்திருவிழா நடந்தது. உற்சவத்தை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்றும் (23ம் தேதி) மாலை 7 மணிக்கு 2ம் தெப்பஉற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !