கன்னிகா பரமேஸ்வரி அம்மன் அக்னி பிரவேச வைபவம்
ADDED :1073 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கன்யா பரமேஸ்வரி அக்னி பிரவேச வைபவம் நடந்தது.
திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கன்யா பரமேஸ்வரி ஆத்மார்ப்பனநாள் எனும் அக்னி பிரவேச வைபவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கலச ஸ்தாபனம், ஹோமங்கள், அம்மனுக்கு அபிஷேகம், அம்மன் 108 கோத்திரங்களுடன் அக்னி பிரவேசம் செய்யும் வைபவம் நடைபெற்றது. இதில் அம்மன் புஷ்ப குவியலால் அலங்கரிக்கப்பட்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரியவைசிய சமூகத்தினர் செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர்.