உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

திண்டுக்கல் : பழநி முருகன் அன்னதான குடில் அறக்கட்டளை சார்பில், பழநி பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வருடம் 13வது ஆண்டாக வரும் பிப்ரவரி 2ம் தேதி ஒட்டன்சத்திரம் அருகே,  குழந்தை வேலப்பர் சன்னிதி அருகே நியூ K.T. திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. அன்னதான குடிலில் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை சிற்றுண்டியும், மதியம் 12.00 மணிக்கு தலை வாழை இலை சாப்பாடும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.அத்துடன் பாத யாத்திரை பக்தர்களுக்காக மருத்துவ முகாமும் அமைக்கப்படுகிறது. இதில் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதியும், மருந்துகளும் வழங்கப்பட இருக்கிறது.பக்தர்கள் இந்த அன்னதானத்திற்கு பொருளாகவோ, பணமாகவோ, அளித்து முருகனின் பேரருளை பெறலாம் என அன்னதான குழுவினர் வேண்டுகின்றனர்.
தொடர்புக்கு: 99443 09719, 98421 98889


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !