மலைக்கோவிலுக்கு தீர்த்தம்
ADDED :1344 days ago
பழநி: பழநி, மலைக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கு அர்ச்சக ஸ்தானிகர்கள் சார்பில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். பழநி, மலைக்கோயில் கோயில்களுக்கு ஜன.26,27,லும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அர்ச்சக ஸ்தானிகர்கள் சார்பில் பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர். அர்ச்சகர்கள், மேள தாளத்துடன் பெரிய நாயகி அம்மன் கோயிலை வலம் வந்தனர். அதன்பின் கிழக்கு ரத வீதி, பெரிய கடை வீதி, காந்தி மார்க்கெட் வீதி, சன்னதி வீதி வழியே மலைக்கோயில் சென்றனர்.