சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச பூஜை
ADDED :990 days ago
சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச பூஜை நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை மற்றும் 102 கோத்திர பூஜைகள் நடந்தது. முன்னதாக தன்வந்திரி மகா சுதர்சன ஹோமம், குபேந்திரன் லட்சுமி ஹோமம் ஆகிய யாகசாலை பூஜை நடந்தது. அதில் அம்மனை கொப்பரை தேங்காய் மற்றும் மஞ்சளால் அலங்கரித்து யாகத்தில் கரைத்தனர். தொடர்ந்து அம்மனை பூக்குழியில் இறக்கிய பின், 27 வகை திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின், தங்கக் கவசம் அணிவித்து மகா தீபாரா தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.