ஆதி செல்வ வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா தொடக்கம்
காரமடை: காரமடை சிறுமுகை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதி செல்வ வலம்புரி விநாயகர் கோவில் கும்அபிஷேக, விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது.
காரமடை சிறுமுகை சாலையில் உள்ள ஆதி செல்வ விநாயகர் கோவிலில் கன்னிமூல கணபதி பரிவார மூர்த்திகள் நவகிரகங்கள் உள்ளிட்ட சன்னதிகள் கோபுர பணிகள் நிறைவடைந்து வரும் 27 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை ஒட்டி இன்று காலை மங்கள இசையுடன் மகா கணபதி ஹோமம் மகா லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம் ஆகியவற்றுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து கோபுர கலசம் முளைப்பாளிகை தீர்த்த குடம் எடுத்து வரப்பட்டது .மாலை விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முதல் கால யாக பூஜை திரவிய ஹோமம் மற்றும் பூர்ணாகதியுடன் முதல் நாள் நிறைவடைந்தது.
26ம் தேதி காலை திருமுறை பாராயணம் இரண்டாம் கால யாக பூஜை ,விசேஷ சந்தி , ஆச்சார்ய வர்ணம் தத்தவ ஹோமம் திரவிய ஹோமம்,மூன்றாம் கால யாக பூஜை சகஸ்ரநாம அர்ச்சனை உள்ளிட்டவை முடிந்து 27 ஆம் தேதி காலையில் கோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகமானது நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேகத்தில் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேகத்தை சிவா கம திருமுறையின் வண்ணமாக சிவாகம வித்யாதி அஸ்வின் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தி வைக்கின்றனர்.