நித்தீஸ்வர ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்
ADDED :997 days ago
காரைக்கால்: காரைக்காலில் நித்தீஸ்வர ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்பாள் ஸமேத ஸ்ரீநித்தீஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் நேற்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.இக்கோவிலில் விநாயகர்.நித்தீஸ்வரர், சுப்ரமணியர்.சரஸ்வதி, நவக்கிரஹங்கள் உள்ளிட்ட பல்வேறு விக்ரஹங்களுக்கு மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவக்கியது.நேற்று நான்காம் காலயாக பூஜை முடிந்து சிவாச்சாரியர்கள் புனிதநீரைகொண்டு வந்து அனைத்து விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.இதில் ஏராளமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.