கீழக்கரை முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :994 days ago
கீழக்கரை: கீழக்கரை வண்ணார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஜன., 26 அன்று விக்னேஸ்வர பூஜை புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, ரக்க்ஷா பந்தன் உள்ளிட்ட முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் காலயாகசாலை வேள்விக்கு பிறகு நாடி சந்தனம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, ஆகியவற்றுக்கு பின்பு காலை 10:30 மணி அளவில் கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சலவை தொழிலாளர் சமூகம் மற்றும் கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.