ஸ்ரீரங்கம் பூபதி திருநாள் : சிம்ம வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு
ADDED :989 days ago
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று பூபதி திருநாள் (தைத்தேர்) உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் மூன்றாம் திருநாளான நேற்று காலை உற்சவர் நம்பெருமாள் சிம்ம வாகனத்தில் உத்திரை வீதிகளில் புறப்பாடு கண்டருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.