உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தியில் ரதசப்தமி விழா: சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி உலா

காளஹஸ்தியில் ரதசப்தமி விழா: சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி உலா

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நேற்று ரதசப்தமியை யொட்டி ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் சப்பரத்தில் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தனர் .முன்னதாக கோயில் வளாகத்தில்  உள்ள அலங்கார மண்டபத்தில் சுவாமி அம்மையார்களின் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் இடையே ஊர்வலமாக கொண்டு சென்றனர் .சுவாமியை சூரிய  பிரபை வாகனத்திலும் அம்பாள் சப்பரத்தில் எழுந்தவெளி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தனர். 4 மாட வீதிகளின் வழி நெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்திகள் சமர்ப்பித்து சாமி அம்மையார்களை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !