காளஹஸ்தி கோயிலில் ஆந்திர தொழில்துறை சிறப்பு முதன்மைச் செயலாளர் தரிசனம்
ADDED :1314 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு நேற்று ஆந்திர மாநில தொழில்துறை சிறப்பு முதன்மைச் செயலாளர் கரிகால வளவன் தம்பதியினர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோயில் நிர்வாக துணை அதிகாரி சதீஷ் மல்லி மற்றும் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர் கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ முருத்யுஞ்சய சன்னதி அருகில் கோயில் சார்பில் பொன்னாடை போர்த்தி சாமி அம்மையார்களின் தீர்த்த பிரசாதங்களை வழங்கினார். மேலும் கோயில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களுடன் சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர்.