காளஹஸ்தியில் அயோத்திய ராமஜன்ம பூமி அறக்கட்டளை துணை தலைவர் தரிசனம்
ADDED :1318 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகாந்த் கமல் நயன்தாஸ் ஜி அவர்கள் அயோத்திய ராமஜன்ம பூமி அறக்கட்டளையின் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் சார்பில் தீர்த்த பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர்.