பழநி மலைக் கோயிலில் தங்க ரத புறப்பாடு ரத்து
ADDED :977 days ago
பழநி: பழநி மலைக் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று பிப்.2 முதல் பிப்.6 வரை தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படும்.
பழநி மலைக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் வருகை தருவது அதிகரித்த வண்ணம் உள்ளது. பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து, தீர்த்த காவடிகள் பழநி கோயிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். தங்கத்தேர் புறப்பாட்டில் கலந்துகொண்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு (பிப்.2) இன்று மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு கோயில் சார்பில் நடைபெற உள்ளது. இதனால் பக்தர்கள் தங்கரதப் புறப்பாட்டில் சுவாமி தரிசனம் செய்யலாம். மேலும் பிப்.3 முதல் பிப்.6 வரை மலைக் கோயிலில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது.