உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பிப்.10ல் லட்சார்ச்சனை மகோத்ஸவம்

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பிப்.10ல் லட்சார்ச்சனை மகோத்ஸவம்

நாச்சியாபுரம்: திருப்புத்தூர் அருகே மானகிரி பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில் வருடாபிேஷகத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மஹோத்ஸவம் பிப்.10ல் துவங்குகிறது.

மானகிரி சபரிநகரில் பஞ்சமுக விஸ்வரூப ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இங்கு கருட முகம், சிம்ம முகம், வராஹ முகம், ஹயக்ரீவர் முகம், வாநர முகம் ஆகிய ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.இக்கோயிலின் வருடாபிேஷகத்தை முன்னிட்டு பிப்.,10 காலை 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கி பஞ்சமூக பூமந்திர ேஹாமம் நடைபெறும். தொடர்ந்து  காலை 11:00 மணிக்கு பூர்ணாகுதியாகி கடம் புறப்பட்டு சுவாமிக்கு அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். மாலை சந்தனக்காப்பில் சுவாமி அருள்பாலிப்பார். தொடர்ந்து சீதா ராம கல்யாண உத்ஸவம், ஸகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறும். மறுநாள் காலை 8:00 மணி முதல் லட்சார்ச்சனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !