கிருஷ்ணாபுரம் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா!
ADDED :4776 days ago
புதுச்சேரி: கிருஷ்ணாபுரம் பாக்கம் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று நடக்கிறது. ஏம்பலம் அடுத்த கிருஷ்ணாபுரம் பாக்கத்தில் உள்ள பச்சைவாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா இன்று (7ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை 7 மணிக்கு மேல், விநாயகர், முருகர், வள்ளி தெய்வானை, பச்சைவாழியம்மன் சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு முருகர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அறங்காவல் குழு தலைவர் வேணுகோபால், செயலாளர் விஜயரங்கம் ஆகியோர் செய்துள்ளனர்.