பவானி மலையாள பகவதியம்மன் கோவில் பொங்கல் திருவிழா!
ADDED :4776 days ago
பவானி: பவானி, அந்தியூர் ரோடு ஸ்ரீ பண்டார அப்பிச்சி, ஸ்ரீ மலையாள பகவதியம்மன் கோவில் பொங்கல் மற்றும் தேர்த்திருவிழா நடந்தது.இக்கோவில் விழா, ஆக., 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்திம் காலை, 7.30 மணிக்கு பவானி, காடையம்பட்டியில் இருந்து ஸ்வாமி புறப்படுல், 9.30 மணிக்கு கோவிலில் கன்னிமார் பூஜை, பவானி ஆற்றில் முதலைக்கு சாதம் வைத்தல், 1.30 மணிக்கு பொங்கல் திருவிழா, 2 மணிக்கு அருள்வாக்கு சொல்லுதல், இரவு 9 மணிக்கு கோவிலில் உள்ள அனைத்து ஸ்வாமிகளுக்கு பெரும் பூஜை, இரவு 10 வாண வேடிக்கையுடன், காடையம்பட்டியில் உள்ள மடப்பள்ளிக்கு ஸ்வாமி செல்லுதல் ஆகியவை நடந்தது.விழாவில் பவானி, குருப்பநாயக்கன்பாளையம், காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம் உள்ளிட்ட பகுதி பொது மக்கள் பங்கேற்றனர். இன்று மாலை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.