நரசிம்மர் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், கிருஷ்ணஜெயந்தியையொட்டி நாளை (8ம் தேதி) சிறப்பு வழிபாடு நடக்கிறது.பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா வரும் 8ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, காலை 5.00 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5.15 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், காலை 6.00 மணிக்கு மகா சுதர்சன ஹோமும், காலை 7.30 மணிக்கு மகா பூர்ணாகுதியும், 8.00 மணிக்கு கோமாதா பூஜையும் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு அலங்கார நைவேத்ய பூஜை, சாற்றுமறை, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.00 மணிக்கு திண்டுக்கல்லை சேர்ந்த விளாஞ்சோலை பிள்ளை ராமானுஜரின், கோவிந்தா, கோபாலா என்ற தலைப்பில் சொற்பொழிவும், மாலை 5.00 மணிக்கு ராவேந்திரா இசைப்பள்ளி மாணவியரின் விஷ்ணு கானங்கள் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.