கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி!
ADDED :4878 days ago
புதுச்சேரி: மங்கலம் ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமத்தில் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி வரும் 23ம் தேதி நடக்கிறது. வில்லியனூர் அடுத்த, மங்கலம் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள, ஸ்ரீ கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தில் வரும் 23ம் தேதி நாம சங்கீர்த்தனம் நடக்கிறது. நிகழ்ச்சியில், காலை 10 மணி முதல் 12.05 மணி வரை மஞ்சப்பரா பிரம்மஹஸ்ரீ ஸ்ரீமோகன் பாகவதர் மற்றும் குழுவினர் நாம சங்கீர்த்தனம் நிகழ்த்துகின்றனர். 22ம் தேதி மாலை 6 மணிக்கு கடையநல்லூர் பிரம்மஸ்ரீ ராஜகோபால் பாகவதர் குழுவினரின் திவ்யநாம பஜனை நடக்கிறது. ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.