முருகனைத் தமிழ்க்கடவுள் என்று கூறுவது ஏன்?
ADDED :1007 days ago
முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகனின் வரலாற்றைக் குறிக்கும் ஆறுபடை தலங்களும் தமிழகத்திலேயே உள்ளன. அவ்வையார், நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களின் தமிழ்ப்பாடல்களை கேட்டு மகிழ்ந்தவர் முருகன். அதனால், அவர் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுகிறார். கார்த்திகேயர், சுப்பிரமணியர், தண்டபாணி போன்ற பெயர்களால் மற்ற மொழி பேசும் மக்களாலும் முருகன் வழிபடப்படுகிறார்.