ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா
ADDED :1031 days ago
சோமனூர்: சேடபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா நேற்று நடந்தது. கோவிலின், 12 வது ஆண்டு விழாவை ஒட்டி பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பால், தயிர், இளநீர்,உள்ளிட்ட பொருட்கள், வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. கலச தீர்த்த அபிஷேகம் முடிந்து மகா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.