பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :977 days ago
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே இடிகரையில் உள்ள பள்ளிகொண்ட ரங்கநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா, நேற்று முன்தினம் மாலை,4:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு ஹோமம், வேத பாராயணம், திவ்ய பிரபந்தம், நாடி சந்தானம், யாத்ரா தானம் நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து, தச தரிசனம், வேத பிரபந்த சாற்று முறை, தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவையொட்டி, மதியம் அன்னதானம், தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.