மாரியம்மன் கோயில் வருடாபிஷேக விழா
ADDED :1031 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோயில் 8ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து நடைபெற்ற தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.