மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
4772 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
4772 days ago
புரட்டாசி ராசிபலன் 17.9.2012-16.10.2012: செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றும் மேஷராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் எட்டாம் இடத்தில் ஆட்சி பெற்று உச்சபலம் கொண்ட ராகுவுடன் உள்ளார். இதனால் உங்கள் எண்ணம், செயலில் விசித்திர மாற்றம் தோன்றும். நற்பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சூரியன் செயல்படுகின்றனர். பேச்சில் விவேகம், சாந்தம் நிறைந்திருக்கும். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். பயணத்தில் மிதவேகம் நல்லது. வீடு மராமத்து பணிகள் குறைந்த செலவின் பேரில் நிறைவேறும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புத்திரர்களின் நற்செயல் பெருமை தரும் வகையில் இருக்கும். எதிரிகளின் கெடுதல் பலமிழந்து போகும். உடல்நலம் சீராக இருக்கும். பணவரவு ஓரளவே இருக்கும். தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு வரலாம். தொழிலதிபர்கள் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வர். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகும்.நல்ல லாபம் பெறுவர். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு பணிகளைச் சிறப்பாகச் செய்வர். குடும்பப் பெண்களுக்கு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் எதிர்பார்த்த நிதிஉதவி கிடைத்து தொழில் வளர்ச்சிப்பணி செய்வர். புதிய ஆர்டர் கிடைத்து உற்பத்தியின் அளவு உயரும். சிலருக்கு தொழில் சார்ந்த அமைப்புகளில் பொறுப்பான பதவி கிடைக்கும். விவசாயிகள் மகசூல் அளவுடன் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் எதிர்பாராத லாபம் உண்டு. அரசியல்வாதிகள் பொது விவகாரங்களில் நீதி, நேர்மையுடன் பேசி செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர். விளையாடும் போது காயம் படலாம். கவனம். பரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் கஷ்டம் குறைந்து வாழ்வில் நன்மை வளரும்.உஷார் நாள்: 20.9.12 மாலை 4.15- 22.9.12 மாலை 6.38.வெற்றி நாள்: செப்டம்பர் 27, 28நிறம்: ரோஸ், ஆரஞ்ச் எண்: 1, 9
4772 days ago
4772 days ago