உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தையூர் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூச விழா

தையூர் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூச விழா

செஞ்சி: தையூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தைப்பூச விழா நடந்தது.செஞ்சியை அடுத்த தையூர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவிலில் தைப்பூச விழா நடத்துவதில் முன்னாள் தலைவர் தென்னரசு தரப்பினருக்கும் தற்போதைய தலைவர் திருமுருகன் தரப்பினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இது குறித்து செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட வில்லை. இது குறித்து திருமுருகன் தரப்பினர் சென்னை ஐகோர்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து தைப்பூசத்தன்று இரு தரப்பினரும் திருவிழா நடந்த நீதிபதி தடை விதித்தார். கோவில் நிர்வாகத்தை நடத்தி வரும் தென்னரசு தரப்பினர் 6 மற்றும் 7 ம் தேதியும் ஊராட்சி தலைவர் திருமுருகன் தரப்பினர் 8 மற்றும் 9ம் தேதியும் திருவிழா நடத்த அனுமதி வழங்கினார். இதையடுத்து 6ம் தேதி 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் காவடி, வேல் ஊர்வலம், மிலகாய் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், அலகு குத்தி டிராக்டர்களில் தொங்கி வருதல் என நேர்த்தி கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !