வடபழநி ஆண்டவர் கோவில் குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா
ADDED :978 days ago
சென்னை: வடபழநி ஆண்டவர் நாளை 10ம் தேதி குடமுழுக்கு ஓராண்டு நிறைவு விழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு இன்று மாலை 5.00 மணிக்கு மேல் மங்கல இசை, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அஷ்டோத்திர சத 108 கலாபிஷேகம். முதல் கால பூஜை, மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை காலை 6.15 மணிக்கு மேல் மங்கல இசை, தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அஷ்டோத்திர சத 108 கலாபிஷேகம். இரண்டாம் கால பூஜை, மகா பூர்ணாஹுதி, தீபாராதனை, கடம் புறப்பாடு, திருஅருட்பிரசாதம் வழங்குதல் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வடபழநி ஆண்டவர் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணைக் கமிஷனர் முல்லை ஆகியோர் செய்துள்ளனர்.