உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) இவ்ளோ வேலையா!

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) இவ்ளோ வேலையா!

புரட்டாசி: குடும்ப ஒற்றுமைக்காக படாதபாடுபடும் துலாம் ராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஆதாய ஸ்தானத்தில் உள்ளார். நவக்கிரகங்களில் சுக்கிரனைத்தவிர பிற கிரகங்கள் அனைத்தும் எதிர்மறை பலன் தருகின்ற இடங்களில் உள்ளனர். ஜென்மச்சனியின் தாக்கமும் வந்து விட்டது. அடுத்தவர் விஷயங்களில் கவனம் கொள்ளாமல் சொந்தப்பணியில் மட்டும் ஈடுபடுவதால் பெருமளவு சிரமம் தவிர்க்கலாம். உறவினர்களின் எதிர்பார்பை பூர்த்திசெய்ய இயலாது. இதனால் மனக்கவலையும் உண்டாகும். தாயின் உடல்நலத்திற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படும். புத்திரர்களின் எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகமாகும். அவர்கள் மீது அதிருப்தி கொள்ளாமல் இயன்ற அளவு நிறைவேற்றுவது நல்லது. உடல்நலம் சீராக இருக்கும். அதேசமயத்தில் மனநலனிலும் அக்கறை காட்டுங்கள். புதிதாகக் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். தம்பதியர் குடும்பத்தின் கஷ்டம் அறிந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வர். தொழிலதிபர்கள் உற்பத்தியை உயர்த்தவும், புதிய ஒப்பந்தம் பெறவும் பல்வேறு தடைகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். வியாபாரிகள் சந்தையில் கடும் போட்டியை சந்திப்பர். கூடுமானவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது. பணியாளர்கள் இவ்ளோ வேலையா என சலிக்குமளவு பணிச்சுமையால் அவதிப்படுவர். குடும்ப பெண்கள் கணவரின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு செயல்படுவர்.  பணிபுரியும் பெண்கள் சக பெண்களின் உதவியால் பணியில் வரும் குளறுபடியை சரிசெய்வர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் விற்பனையில் அனுகூலம் பெறுவர். அரசியல்வாதிகள் அவப்பெயர் வராத அளவிற்கு நேர்மையுடன் செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்கு மிதமான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் சோம்பலைத் தவிர்ப்பதால் மட்டுமே தரதேர்ச்சி பெற முடியும்.

பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
உஷார் நாள்: 4.10.12 அதிகாலை 5.18- 6.10.12 மாலை 4.52
வெற்றி நாள்: அக்டோபர் 11, 12
நிறம்: வெள்ளை, மஞ்சள்   எண்: 3, 6


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !