உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோட்டை முனீஸ்வரர், ஜக்கம்மாள் கோயிலில் மாசிக்களரி விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

கோட்டை முனீஸ்வரர், ஜக்கம்மாள் கோயிலில் மாசிக்களரி விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்

கமுதி: கமுதி அருகே கோட்டை முனீஸ்வரர், செல்வ விநாயகர், பாலமுருகன், ஜக்கம்மாள் கோயிலின் 46ம் ஆண்டு மகா சிவராத்திரி மாசிக்களரி திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனை முன்னிட்டு கோட்டை முனீஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. பின்பு கோயில் முன்பு முகூர்த்த கால் நடப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.18ம் தேதி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கும்பக்கரகம், பால்குடம், பொங்கல் வைத்தல், 19ம் தேதி பூச்செரிதல் விழா, 20ம் தேதி 1008 திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. தினந்தோறும் கோட்டை முனீஸ்வரருக்கு சிறப்புபூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !