உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து வழங்கி பக்தர்

காளஹஸ்தி சிவன் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்து வழங்கி பக்தர்

காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தி சிவன் கோயிலில் வரும் 13-ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை நடக்க இருக்கும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தை யொட்டி தன்னுடைய பங்கிற்கு பொறுப்புடன் செயல் பட்டு  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு காணிக்கையாக நாயுடு பேட்டையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் சுரேஷ் அவர்கள் பக்தர்களின் வசதிக்காக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள (மெடிசின்ஸ்) மருந்துகளை இன்று வியாழக்கிழமை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சுரு. தாரக சீனிவாசலுவிடம் மருந்துகளை தேவஸ்தானத்திற்கு வழங்கினர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அவசர கால உதவியாக மருந்துகள் தேவை ஏற்பட்டால் இவை பயன்படும் என்ற நோக்கத்தில் சுரேஷ் வழங்குவதாகவும் தேவஸ்தானம் சார்பில் முதலுதவி  மையங்களுக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !