மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) டிரான்ஸ்பர் வருது!
புரட்டாசி: வாக்குறுதி தருவதில் முன்னெச்சரிக்கை கொண்ட மீனராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் குருவும் அஷ்டமச்சனியும் ஒருவருக்கொருவர் சஷ்டாஷ்டக நிலையில் உள்ளனர். நற்பலன் தரும் கிரகங்களாக கேது, புதன் செயல்படுகின்றனர். பிறர் மீதுள்ள அதிருப்தி பேச்சில் வெளிப்படலாம். கவனம். பசு, பால் பாக்ய யோகம் அமைந்து மனதில் புதிய தெம்பைத்தரும். வீடு, வாகனத்தில் எதிர்பார்த்த வசதி தாராள அளவில் கிடைக்கும். பூர்வசொத்தில் திருப்திகர பணவரவு உண்டு. புதிய முயற்சி திட்டங்களை முன்யோசனையுடன் செயல்படுத்துவது நல்லது. புத்திரர்கள் ஆடம்பரப்பொருள் கேட்டுப் பெறுவதில் ஆர்வம் கொள்வர். அவர்களை பொறுமையுடன் வழிநடத்துவது நற்பலன் பெற உதவும். கடந்த காலங்களில் உங்களுக்கு நம்பிக்கையாக செயல்பட்டவர் சூழ்நிலை காரணமாக எதிர்மறையாக நடந்துகொள்கிற நிலை ஏற்படலாம். பொறுமையும் கவனமும் அவசியம். தம்பதியர் விட்டுக்கொடுத்து செயல்படுவதால் குடும்ப ஒற்றுமை சீராகும். தொழிலதிபர்கள் உற்பத்தி, தரத்தை உயர்த்த புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவர். கைவிட்டுப்போன ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரிகள் குறைந்த லாபத்துக்கு பொருட்களை விற்க வேண்டி வரும். பணியாளர்கள் குறித்தகாலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சிலர் வெளியூர்களுக்கு மாறிச்செல்கிற நிலை உண்டாகும். குடும்பப் பெண்கள் கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெற, கொடுக்கக்கூடாது. புத்திரர்களின் அந்தரங்க செயல்பாடுகள் சிறிது கவலை தரும். பணிபுரியும் பெண்கள் வேலையை தாமதமின்றி நிறைவேற்றுவர். சலுகைகள் ஓரளவு கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் உழைப்பால் உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். தேவை நிறைவேறும். அரசியல்வாதிகள் புதிய ஆதரவாளர்களின் அன்பு, நம்பிக்கை பெறுவர். விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் சுமாரான லாபம் உண்டு. மாணவர்கள் லட்சிய மனதுடன் படித்து எதிர்பார்த்த தேர்ச்சி பெறுவர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் வாழ்வில் நன்மைகூடும்.
உஷார் நாள்: 18.9.12 பகல் 1.39- 20.9.12 மாலை 4.15 மற்றும் 15.10.12 இரவு 9.37- 16.10.12 முழுவதும்.
வெற்றி நாள்: செப்டம்பர் 25, 26
நிறம்: ரோஸ், ஊதா எண்: 7, 8