உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்திபீடத்தில் இளநீர் அபிஷேகம் செய்து பெண்கள் வழிபாடு

சக்திபீடத்தில் இளநீர் அபிஷேகம் செய்து பெண்கள் வழிபாடு

துாத்துக்குடி: துாத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற ஏராளமான பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

சக்திகொடியை மகளிர் அணி தலைவி பத்மாவதி ஏற்றி வைத்தார். குருபீட வழிபாட்டை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் துவக்கி வைத்தார்.விவசாயம் வளம்பெறவும்,  நோயிலிருந்து மக்களை காக்கவும் வேண்டி பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை பொதுமேலாளர் கந்தசாமி துவக்கி வைத்தார். ஆதிபராசக்திக்கு வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை செய்தார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட பொருளாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் செந்தில் சுப்பிரமணியன், இளைஞர் அணி செல்லத்துரை, சக்திபீட துணைத்தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, மகளிர் அணி பிரமிளா, வட்டதலைவர்கள் செல்வம், வண்டிமலையான், பத்மாவதி, செல்வி, காசியம்மாள், பாலசுப்ரமணியன், மன்ற தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !