காளஹஸ்தி பிரம்மோற்சவம் : வங்கியில் இருந்த சுவாமி நகைகள் கோயில் வந்தது
ADDED :966 days ago
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் சாமி அம்மையார்கள் நான்கு மாட ஊர்வலத்தின் போது அலங்கரிக்கப்படும் தங்க , வைர நகைகளை வங்கியில் ( Bank locker) இருந்து கோயில் அதிகாரி சாகர் பாபு தலைமையில் அதிகாரிகள் கோயிலுக்கு கொண்டு வந்தனர். காளஹஸ்தீஸ்வரருக்கு அலங்கரிக்கப்படும் தங்க வைர நகைகள் மற்றும் அம்மனுக்கு அலங்கரிக்கப்படும் ஸ்வர்ண ஆபரணங்களை நான்கு மாட வீதிகளில் ஊர்வலத்தின் போது பக்தர்களுக்கு கண்கவரும் வகையில் இருக்க உள்ளது குறிப்பிடதக்கது.