இன்று மாசி அனுஷம் நக்ஷத்திரம்
ADDED :967 days ago
கூரத்தாழ்வானின் மற்றொரு திருக்குமாரர் ஸ்ரீராமப்பிள்ளை என்னும் திருநாமம் கொண்ட வேதவியாசபட்டரின் அவதார திருநக்ஷத்ரமாகும்.
ஸ்ரீவேதவியாசபட்டர் (ஸ்ரீராமப்பிள்ளை) வாழித்திருநாமம்
தெண்டிரைசூழ் திருவரங்கம் செழிக்க வந்தான் வாழியே
தென்னரங்கர் மைந்தனெனச் சிறக்கவந்தோன் வாழியே
பண்டிதராம் எதிராசர் பதம் பணிந்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகர்ந்துரைப்போன் வாழியே
மண்டுபுகழ்க் கூரனார் மகிழ்ந்த செல்வன் வாழியே
வைகாசி அனுடத்தில் பாருதித்தான் வாழியே
எண்டிசையும் சீரெம்பார் பதம் பணிந்தோன் வாழியே
எழில் சீராமப்பிள்ளை இணையடிகள் வாழியே.