இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடப்பட்டன
ADDED :1229 days ago
சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை மாதம் கடைசி வெள்ளி திருவிழா முடிந்ததை தொடர்ந்து நேற்று காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கிடப்பட்டன. விருதுநகர் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் வளர்மதி, கோயில் உதவி ஆணையர் கருணாகரன், பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுவினர், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் காணிக்கை பொருள் கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்கம் ரூ 81,01,488, தங்கம் 309கிராம், வெள்ளி 1014 கிராம் காணிக்கையாக பக்தர்கள் உண்டியலில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது. காணிக்கை பொருட்கள் கோயில் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.