உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வசிஸ்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவில் பாலாலயம், திருப்பணிகள் துவக்க விழா

வசிஸ்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவில் பாலாலயம், திருப்பணிகள் துவக்க விழா

திட்டக்குடி: திட்டக்குடி வசிஸ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவிலில், பாலாலயம் மற்றும் திருப்பணிகள் துவக்க விழா நடந்தது.வசிஸ்டபுரம் அரங்கநாதபெருமாள் கோவில் பாலாலயம் மற்றும் திருப்பணிகள் துவக்க விழா, கடந்த 14ம் தேதி மாலை வாஸ்து பூஜைகளுடன் துவங்கியது. நேற்று காலை தமிழ்வேதம் துவக்கம், ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. அதன்பின் சுவாமிக்கு கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை பாலாலயம் நடந்தது. தொடர்ந்து ராஜகோபுரம் அமைப்பதற்கான திருப்பணிகள் துவக்க விழாவிற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. அமைச்சர் கணேசன், கோவில் தக்கார் தமிழ்செல்வி, செயல்அலுவலர் சிவப்பிரகாசம், திட்டக்குடி நகராட்சி சேர்மன் வெண்ணிலா, துணைசேர்மன் பரமகுரு, தொழிலதிபர் ராஜன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் மன்னன், தி.மு.க.,ஒன்றியசெயலாளர் அமிர்தலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். வைணவ செம்மல் வரதசிங்காச்சாரியார், ராகவன் பட்டாச்சாரியார் பூஜைகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !