உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி விழா : குலதெய்வ கோயில்களில் குவியும் பக்தர்கள்

மகா சிவராத்திரி விழா : குலதெய்வ கோயில்களில் குவியும் பக்தர்கள்

கம்பம்: சிவராத்திரியை முன்னிட்டு குல தெய்வங்களின் கோயில்களில் தங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபடுவதற்காக அனைத்து கோயிலும் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.ஆண்டு தோறும் நடைபெறும் சிவராத்திரி திருவிழா நாளில் இரவு முழுவதும் கோயிலில் திறந்திருக்கும்.குறிப்பாக குலதெய்வங்களை வழிபடுபவர்கள் இந்நாளில் தங்கள் குல தெய்வங்களை வழிபடச் செல்வார்கள், பெரிய கோயில்கள் என்று இல்லாமல் சின்னஞ்சிறு கோயில் என தமிழக முழுவதும் லட்சக்கணக்கான கோயில்கள் புதுப்பொலிவு பெற்று நடை திறக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.குல தெய்வங்களை வழிபடுவதற்காக ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிற மாவட்டங்களுக்கு பொதுமக்கள் செல்லத் துவங்கியுள்ளனர்.குறிப்பாக கம்பம் பகுதியில் வசிப்பவர்கள் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கோயில்களுக்கு அதிக அளவில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் செல்ல தூங்கி உள்ளனர்.விடிய விடிய நடைபெறும் சிவராத்திரி விழாவை முன்னிட்டு கோயில்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !