ஆலங்குப்பம் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்
ADDED :960 days ago
புதுச்சேரி: ஆலங்குப்பம் கோவிலில் மிளகாய் பொடி அபிஷேகம் நட ந்தது. புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா, கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு சாகை வார்த்தல் நடந்தது. நேற்று மதியம் பால் மிளகாய் அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அரிபுத்தரி, பாண்டியன், அய்யப்பன், பிரபாகரன் ஆகியோருக்கு பால் மிளகாய் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை விளக்கு பூஜையும், இரவு பார்வதி பரமசிவன் வேட மணிந்து வீதியுலா நடந்தது. இன்று 18ம் தேதி இரவு 7:00 மணிக்கு ரண களிப்பு, அங்காளம்மன் மின்விளக்கு அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. நாளை 19ம் தேதி மாலை 6:00 மணிக்கு, மயானக்கொள்ளை நடக்கிறது.