சோமவார அமாவாசை ரகோத்தமர் பிருந்தாவனத்தில் பக்தர்கள் வழிபாடு
ADDED :1221 days ago
திருக்கோவிலூர்: சோமவார அமாவாசையை முன்னிட்டு மணம்பூண்டி ரகோத்தமர் மூலபிருந்தாவன வளாகத்தில் பக்தர்கள் நாகலிங்கத்தை வணங்கி வழிபட்டனர்.
திங்கட்கிழமை வரும் அமாவாசை சோமவார அமாவாசை என அழைக்கப் படுகிறது. இத்தினத்தில் அரசமரம், ஆலமரம், வேப்பமரம் ஒருசேர இருக்கும் இடத்தில் நாக லிங்கத்தை வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் திருமண தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன்படி திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி ரகோத்தமர் மூல பிருந்தாவன வளாகத்தில் அமைந்திருக்கும் அரசமர நாக லிங்கத்தை நேற்று அதிகாலையிலிருந்து பக்தர்கள் வணங்கி வலம் வந்தனர் தொடர்ந்து ஆஞ்சநேயர், ரகோத்தமர் மூல பிருந்தாவனத்தையும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.