கேதார்நாத் லிங்க தரிசனம்
ADDED :1327 days ago
ஊட்டி: ஊட்டி பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ பிரம்மகுமாரிகள் வித்யாலயத்தில் கேதார்நாத் லிங்க தரிசனம் நடந்துவருகிறது.
ஊட்டி எட்டின்ஸ் சாலையில் பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் உள்ளது. இங்கு, இமயமலையின் கேதார்நாத் மற்றும் கோடி லிங்க தரிசனம் செய்யும் லிங்கம் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் பொதுமக்களின் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. திரளான பொதுமக்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். பிரம்மகுமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் ராஜேஸ்வர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.