உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடன நிகழ்ச்சி

சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடன நிகழ்ச்சி

சிவகாசி: சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு நடன பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. சிவகாசி சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு நடன பள்ளிகளின் மாணவிகள் சிவன், முருகன், அம்மன் வேடமிட்டு நாட்டிய நாடக நிகழ்ச்சி நடத்தினர். பஜனை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !