சாரதா ஆசிரமத்தில் குருமகாராஜ் 188 வது ஜெயந்தி விழா: சிறப்பு ஹோமம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் குருமகாராஜ் 188 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் ரதோற்சவம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் குருமகாராஜ் 188 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் ரதோற்சவம் நடந்தது. அதனையொட்டி இன்று காலை 10 மணியளவில் சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ரதோற்சவம் நடந்தது. சாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். சாரதா கல்வியில் கல்லூரி தாளாளர் யத்தீஸ்வரி நித்திய விவேகப்ரியா அம்பா சொற்பொழி வாற்றினார். ஸ்ரீ சாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா, ஸ்ரீசாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மவிகாச ப்ரியாஅம்பா, ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.